திங்கள், 23 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Mahendran
Last Modified: வியாழன், 9 நவம்பர் 2023 (13:22 IST)

பெரியார் சிலை அகற்றுவது குறித்து அண்ணாமலை புதிய விளக்கம்..!

தமிழகத்தில் பாஜக ஆட்சிக்கு வந்தால் ஸ்ரீரங்கம் கோவிலுக்கு எதிரே உள்ள பெரியார் சிலையை அகற்றுவோம் என்று தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை சமீபத்தில் அறிவித்தார்.

அவரது இந்த அறிவிப்புக்கு பலர் கண்டனம் தெரிவித்தனர் என்பதும் அமைச்சர் சேகர் பாபு, முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் உள்ளிட்ட பலர் கடும் கண்டனத்துடன் கூடிய கருத்து தெரிவித்தனர் என்பதையும் பார்த்தோம்.

இந்த நிலையில்  பெரியார் சிலை அகற்றுவது குறித்து தற்போது அண்ணாமலை புதிய விளக்கம் அளித்துள்ளார். அதில் கோவிலுக்கு எதிரே உள்ள தொகுதி பெரியார் சிலையை எடுத்து அதை எங்கு வைக்க வேண்டுமோ அங்கு உரிய கௌரவத்துடன் வைப்போம் என்று கூறியுள்ளார்.

பெரியாரின் கருத்துக்கள் பொது இடத்தில் இருக்கலாம். ஆனால் கோவில் அருகே இருக்கக்கூடாது. ஸ்ரீரங்கம் கோயில் முன் உள்ள பெரியார் சிலையை வேறு இடத்தில் வைப்பதே பாஜகவின் தேர்தல் வாக்குறுதி என்று தெரிவித்தார்.

Edited by Mahendran