சென்னை-நெல்லையை அடுத்து சென்னை-தூத்துகுடி சிறப்பு ரயில்: தென்னக ரயில்வே
தீபாவளி பண்டிகையை முன்னிட்டு சென்னையில் இருந்து நெல்லைக்கு சிறப்பு ரயில் இயக்கப்பட உள்ளதாக தென்னக ரயில்வே அறிவித்துள்ளது என்பதை ஏற்கனவே பார்த்தோம்.
சென்னை - நெல்லை சிறப்பு ரயில் நவம்பர் 8, 15 மற்றும் 22 ஆகிய தேதிகளில் இயக்கப்பட இருப்பதாக அறிவிக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில் சென்னை - நெல்லை சிறப்பு ரயிலை அடுத்து தற்போது சென்னை - தூத்துக்குடிக்கு சிறப்பு ரயில் இயக்க போவதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.
தீபாவளி பண்டிகையை முன்னிட்டு சென்னையில் இருந்து தூத்துக்குடிக்கு சிறப்பு ரயில் இயக்கம் என்றும், கூட்ட நெரிசலை குறைக்கும் வகையில் சென்னை - தூத்துக்குடி சிறப்பு ரயில் இயக்கப்படுகிறது என்றும் தென்னக ரயில்வே தெரிவித்துள்ளது.
இந்த சிறப்புரயில் நவம்பர் 10, 12ஆம் தேதிகளில் சென்னையில் இருந்து இரவு 11.45 மணிக்கு இயக்கப்படுகிறது என அறிவிக்கப்பட்டுள்ளது.
Edited by Siva