தொடர்புடைய செய்திகள்
- பொன்னியின் செல்வனைத் தொடர்ந்து லைகாவின் அடுத்த படம்... கவனம் ஈர்க்கும் ஜெய்யின் புதிய பாடல்! !
- ரசிகர்களைக் கவர்ந்த ஜெய்-ன் ''தீராக் காதல்'' பட டிரெயிலர்
- லாட்டரி அதிபர் மார்ட்டினுக்கு சொந்தமான அலுவலகத்தில் அமலாக்கத்துறை சோதனை..!
- ரத்தம் கொண்டு செல்லும் ட்ரோன்கள்: டெல்லியில் நடந்த பரிசோதனை வெற்றி..!
- திருமணத்திற்கு முன் மணமகனின் உண்மையான குணத்தை அறிந்து கொள்ள இந்தச் சோதனை உதவுமா?
லைகாவின் சென்னை அலுவலகத்தில் அமலாக்கத்துறை திடீர் சோதனை..!
தமிழ் திரை உலகின் முன்னணி தயாரிப்பு நிறுவனங்களில் ஒன்றான லைகா நிறுவனத்தின் சென்னை அலுவலகங்களில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை செய்து வருவதாக தகவல் வெளியாகி உள்ளன.
ரஜினி, கமல், அஜித், விஜய் உள்பட பல பிரபலங்களின் படங்களை தயாரித்து வரும் நிறுவனம் லைகா நிறுவனம். சமீபத்தில் கூட இந்நிறுவனத்தின் தயாரிப்பில் உருவான பொன்னின் செல்வன் படத்தின் இரண்டாம் பாகம் வெளியானது.
தற்போது இந்தியன் 2 , லால் சலாம், விடாமுயற்சி உள்பட ஒரு சில படங்களை நிறுவனம் தயாரித்து வருகிறது
இந்நிலையில் சென்னை தேனாம்பேட்டையில் உள்ள லைகா நிறுவனத்தின் அலுவலகத்தில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை செய்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளன. சட்ட விரோத பண பரிமாற்றம் தொடர்பாக வந்த புகாரின் அடிப்படையில் இந்த சோதனை நடைபெற்று வருவதாக கூறப்படுகிறது
Edited by Siva
அடுத்த கட்டுரையில்
