'துணிவு' பட கொண்டாட்டத்தின் போது ரசிகர் பலி!
'துணிவு 'பட கொண்டாட்டத்தின் போது, லாரியில் ஏறி நடனம் ஆடிய போது ரசிகர் கீழே விழுந்து உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர் அஜித்குமார். இவர் நடிப்பில்,ஹெச்.வினோத் இயக்கத்தில் போனி கபூர் தயாரிப்பில் இன்று அதிகாலையில் வெளியான படம் துணிவு.
அஜித்தின் ஒவ்வொரு பட ரிலீஸின் போது பெரும் எதிர்பார்ப்பும் கொண்டாட்டமும் இருக்கும் நிலையில், துணிவு படத்தையும் ரசிகர்கள் கொண்டாட்டத்துடன் வரவேற்றனர்.
இந்த நிலையில், சென்னையில் ரோகிணி தியேட்டரில் துணிவு படம் பார்க்க வந்த அஜித் ரசிகர் பரத்குமார் (19) லாரியில் ஏறி நடனம் ஆடிக் கொண்டிருந்தபோது, திடீரென்று கீழே விழுந்தார்.
இதில், பரத்குமார் பலத்த காயம் அடைந்தார். அவரை அருகில் உள்ள மருத்துவமனையில் சேர்த்த நிலையில், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.