ஞாயிறு, 29 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: புதன், 10 அக்டோபர் 2018 (11:47 IST)

படுக்கைக்கு அழைத்த வைரமுத்துவின் காலில் விழுந்த சின்மயி - விளக்கம்

தமிழ் சினிமாவின்  பிரபல பாடகி சின்மயி தான் சினிமா துறையில் அனுபவித்த பாலியல் தொல்லை குறித்து பகிரங்கமாக தெரிவித்தார். அது சமூக வலைத்தளங்களில் பலரின் கவனத்தை ஈர்த்துள்ளது. 
பாடகி சின்மயி  கடந்த சில நாட்களாக ட்விட்டரில்  கவிஞர் வைரமுத்துவின்  மீது அடுக்கடுக்கான புகார்களை தெரிவித்து வருகிறார். இதைப்பற்றி சின்மயி இன்று பல வருடங்களுக்கு முன்பு தன்னை படுக்கைக்கு அழைத்த சம்பவம் பற்றி விளக்கியுள்ளார்.
 
இது நடந்து 13 வருடத்திற்கு மேல் இருக்கும் என கூறியுள்ள  சின்மயி , அதற்கு பிறகு நடந்த திருமணத்தின் போது ஏன் வைரமுத்துவின் காலில் விழுந்தீர்கள் என சிலர் வீடியோ வெளியிட்டு கேள்வி எழுப்பியுள்ளனர்.
 
தற்போது அதற்கு பதில் அளித்துள்ள சின்மயி, "அப்போது இதுபற்றி  என் கணவர் மற்றும் அவரது குடும்பத்தினருக்கு இந்த விஷயம் பற்றி எதுவும் தெரியாது. வைரமுத்துவின் மகன்கள் இருவரும் எங்களுக்கு நெருக்கமானவர்கள் என்பதால்  அவர்களை அழைத்தோம். வைரமுத்துவின்  மகன்களை அழைக்கும் போது அவரை எப்படி அழைக்காமல் விட முடியும்" என சின்மயி சாமர்த்தியமான பதில்களை கூறியுள்ளார்.