1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Siva
Last Updated : வெள்ளி, 21 ஜூன் 2024 (13:59 IST)

விஷ சாராயத்தில் கலக்கப்பட்ட மெத்தனால் சென்னையில் இருந்து வந்ததா? திடுக்கிடும் தகவல்.!

கள்ளக்குறிச்சி கருணாபுரத்தில் விற்கப்பட்ட விஷ சாராயத்தில் கலக்கப்பட்ட மெத்தனால் ஆந்திரா மற்றும் சென்னை புறநகர் பகுதிகளில் இருந்து வாங்கப்பட்டது என சி.பி.சி.ஐ.டி. போலீசாரின் விசாரணையில் திடுக்கிடும் தகவல்கள் வெளியாகியுள்ளது.
 
ஜூன் 17ல் மாதேஷ் என்பவரிடம் இருந்து மெத்தனாலை சின்னதுரை வாங்கியதாகவும், 
சின்னத்துரையிடம் இருந்து மெத்தனாலை குடித்துப் பார்த்து கண்ணுக்குட்டி என்கிற கோவிந்தராஜின் சகோதரர் தாமோதரன் வாங்கியதாகவும் விசாரணையில் திடுக்கிடும் தகவல் வெளியாகியுள்ளது.
 
மேலும் மெத்தனாலை குடித்துப் பார்த்து விட்டு கெட்டுப் போய்விட்டதாக கோவிந்தராஜன் மற்றும் சின்னத்துரையிடம் தாமோதரன் கூறியதாகவும், ஆனால் உயர்தர சரக்கு எனக்கூறி விற்பனை செய்யுங்கள் என்று கோவிந்தராஜன் மற்றும் தாமோதரனிடம் மெத்தனாலை சின்னத்துரை விற்பனை செய்ததாக தற்போது தெரிய வந்துள்ளது.
 
எனவே கள்ளக்குறிச்சி கள்ளச்சாராயம் விஷயத்தில் இன்னும் சில விசாரணைகள் நடைபெற இருப்பதாகவும் அதில் சில திடுக்கிடும் தகவல்கள் வெளியாகும் என்றும் கூறப்படுவது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. மொத்தத்தில் மெத்தனால் விற்பனை செய்யும் நெட்வொர்க்கை கூண்டோடு பிடிக்க காவல்துறை திட்டமிட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளன. 
 
Edited by Siva