கள்ளுக்கடைகளை திறந்தால் பூரண மதுவிலக்கு சாத்தியம்! – பாஜக தமிழக தலைவர் அண்ணாமலை!
கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயம் குடித்து பலர் உயிரிழந்த நிலையில் பூரண மதுவிலக்கை அமல்படுத்துவது குறித்து பாஜக தமிழக தலைவர் அண்ணாமலை கருத்து தெரிவித்துள்ளார்.
கள்ளக்குறிச்சியில் மெத்தனால் கலந்த சாராயத்தை குடித்த 49 பேர் பலியான நிலையில் பலர் உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்நிலையில் தமிழகத்தில் கள்ளச்சாரயத்தை முழுவதுமாக ஒழிக்க வேண்டும், பூரண மதுவிலக்கை அமல்படுத்த வேண்டும் உள்ளிட்ட குரல்கள் ஒலிக்கத் தொடங்கியுள்ளது.
இந்நிலையில் பூரண மதுவிலக்கை அமல்படுத்துவது குறித்து பாஜக தமிழக தலைவர் அண்ணாமலை பேசியுள்ளார். அதில் அவர் “கள்ளச்சாராயத்தை ஒழிப்பதற்கான கட்டாயத்தில் நாம் இருக்கிறோம். யோகா செய்வதன் மூலம் குடிப்பழக்கத்தில் இருந்து மீட்டு எடுக்கலாம். தமிழகத்தில் உடனடியாக பூரண மதுவிலக்கு கடினம்தான். ஆனால் கொஞ்சம் கொஞ்சமாக மதுக்கடைகளை மூடிவிட்டு கள்ளுக்கடைகளை திறந்தால் பூரண மதுவிலக்கு சாத்தியமாகும். ஆனால் கள்ளுக்கடைகளும் அரசின் தீவிர கண்காணிப்பில் செயல்பட வேண்டும்” என்று தெரிவித்துள்ளார்.
Editb by Prasanth.K