ஏர்வாடி மனநலக் காப்பகத்தில் இருந்து மாயமான பெண் – பலாத்கார வழக்கில் 7 பேர் கைது !

Last Modified வியாழன், 7 நவம்பர் 2019 (10:14 IST)
ஏர்வாடி மனநல காப்பகத்தில் சிகிச்சைப் பெற்றுவந்த மனநலம் பாதிக்கப்பட்ட பெண் ஒருவரை 7 பேர் கொண்ட கும்பல் ஒன்று பாலியல் வல்லுறவு செய்தது அதிர்ச்சியை அளித்துள்ளது.

ஏர்வாடி மனநலக் காப்பகத்தில் சிகிச்சைப் பெற்று வந்த கேரளாவைச் சேர்ந்த பெண் ஒருவர் இரு நாட்களுக்கு முன்னர் இரவில் அவர் மாயமாகியுள்ளார். காப்பகத்தின் பொறுப்பாளர்கள் அவரைத் தேடியபோது அவர் காப்பகத்துக்கு அருகில் உள்ள சாலையில் மறுநாள் காலை கண்டுபிடிக்கப்பட்டார். இதையடுத்து அவரது பெற்றோர்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

இதையடுத்து அந்த பெண்ணின் தந்தை போலிஸில் அளித்த புகாரின் அடிப்படையில் போலிஸார் விசாரணை நடத்தினர். மருத்துவப் பரிசோதனையில் அந்த பெண் கற்பழிக்கப்பட்டது கண்டுபிடிக்கப்பட்டது. இது சம்மந்தமாகப் போலீஸார் அந்த பகுதியைச் சேர்ந்த 7 இளைஞர்களைக் கைது செய்தனர். கஞ்சா அடிமைகளான இவர்கள் அந்த பெண்ணைக் கடத்தி பாலியல் வல்லுறவு செய்துள்ளனர். இதில் சிலர் 18 வயதுக்கும் கிழுள்ள சிறுவர்கள் என்பது அதிர்ச்சியளித்துள்ளது. இதில் மேலும் படிக்கவும் :