திமிங்கலத்தின் உமிழ்நீருக்கு 5 கோடி ரூபாயா? விற்க முயன்ற ஐவர் கைது!
இந்த வகை உமிழ்நீர் உயர்ரக விலையுயர்ந்த வாசனை திரவியங்கள் தயாரிக்க பயன்படுத்துவதாக சொல்லப்படுகிறது.
கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள கங்கான் கடை என்ற பகுதியில் தடை செய்யப்பட்ட திமிங்கலத்தின் உமிழ்நீரை விற்பதாக போலிஸாருக்கு தகவல் வந்துள்ளது. இதையடுத்து விற்க முயன்ற ஐந்து பேரைக் கைது செய்து அவர்களிடம் இருந்து சுமார் 5 கிலோ எடை மதிப்புள்ள உமிழ்நீர் கைப்பற்றப்பட்டுள்ளது. இதன் மதிப்பு 5 கோடி ரூபாய் என சொல்லப்படுகிறது. இதை வாங்க முயன்ற தம்பதியினரையும் தேடி வருகின்றனர்.