யார் யாருக்கு என்ன பதவி: முடிவுகளை எடுத்த டிடிவி!

Sugapriya Prakash| Last Modified புதன், 11 நவம்பர் 2020 (18:27 IST)
அம்மா மக்கள் முன்னேற்றக் கழக பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன் கட்சியின் முக்கிய பொறுப்புகளில் ஆட்களை நியமித்துள்ளார். 
 
இது குறித்து தகவல் வெளியிட்டுள்ள அவர் குறிப்பிட்டுள்ளதாவது, 
கட்சியின் துணைப் பொதுச்செயலாளராக முன்னாள் அமைச்சரும், தென்சென்னை தெற்கு மாவட்ட செயலாளருமான ஜி.செந்தமிழன் நியமிக்கப்பட்டுள்ளார்.
 
அமமுக பொருளாளராக முன்னாள் அரசு கொறடா, திருச்சி வடக்கு மாவட்ட செயலாளர் ஆர்.மனோகரன் நியமிக்கப்பட்டுள்ளார்.
 
கட்சியின் தலைமை நிலையச் செயலாளராக முன்னாள் அமைச்சர், திருப்பூர் புறநகர் மாவட்ட செயலாளர் சி.சண்முகவேலு நியமிக்கப்பட்டுள்ளார்.
 
தேர்தல் பிரிவு செய லாளராக ராணிப்பேட்டை மாவட்ட செயலாளர் என்.ஜி.பார்த்திபன் நியமிக்கப்பட்டுள்ளார்.


இதில் மேலும் படிக்கவும் :