1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Papiksha Joseph
Last Updated : வெள்ளி, 27 ஆகஸ்ட் 2021 (17:28 IST)

வழக்குக்கு மேல் வழக்குகள்... புழல் சிறையில் புழுங்கும் மீரா மிதுன்!

நடிகை மீரா மிதுன் கடந்த சில நாட்களுக்கு முன்னர் பட்டியல் இனத்தவர் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசியதாக தகவல் வெளியானது. இது குறித்த வீடியோ வைரல் ஆன நிலையில் அவர் மீது 6 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
 
இந்த நிலையில் திடீரென மீராமிதுன் தலைமறைவான நிலையில் அவரை பிடிக்க காவல்துறையினர் தனிப்படை அமைத்தனர். பின்னர் கேரளாவில் உள்ள ஆலப்புழா என்ற இடத்தில் உள்ள ஒரு நட்சத்திர ஓட்டலில் மீராமிதுன் தங்கியிருந்த நிலையில் அவர் கைது செய்யப்பட்டார். இதையடுத்து சென்னைக்கு அழைத்து வரப்பட்டு புழல் சிறையில் அடைக்கப்பட்டார். 
 
இந்நிலையில் ஜோ மைக்கேல் என்பர் மீரா மிதுன் தன்னை சமூகவலைத்தளங்கில் அவதூறு பேசுவதாக கொடுத்த புகாரின் அடிப்படையில் அவர் சிறையிலேயே மீண்டும் கைதுசெய்யப்பட்டார். ஏற்கனவே இரண்டு வழக்குகளில் கைது செய்யப்பட்ட மீரா மிதுன் மீது எழும்பூர் காவல் நிலையத்தில் இரண்டு வழக்குகளும் சென்னை மத்திய குற்றப்பிரிவில் ஒரு வழக்கு என மொத்தம் 5 வழக்குகள் உள்ளது குறிப்பிடத்தக்கது.