புதன், 25 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Prasanth Karthick
Last Modified: ஞாயிறு, 18 ஏப்ரல் 2021 (09:28 IST)

விவேக் சாரின் ஆசையை நிறைவேற்றுவோம்! – மரக்கன்று நடும் விஜய் ரசிகைகள்!

நடிகர் விவேக் மறைந்த நிலையில் அவரது மரக்கன்று நடும் முயற்சியை நிறைவேற்றும் பணியில் விஜய் ரசிகைகள் ஈடுபட்டுள்ள புகைப்படம் வைரலாகியுள்ளது.

தமிழ் சினிமா நகைச்சுவை நடிகரும், சமூக செயற்பாட்டளருமாக விளங்கிய நடிகர் விவேக் நேற்று உடல்நலக்குறைவால் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. சமூக செயற்பாடுகளில் ஆர்வம் காட்டிய விவேக் முன்னாள் குடியரசு தலைவர் அப்துல் கலாமின் தூண்டுதலின் பேரில் மரக்கன்றுகள் நடும் முயற்சியில் தீவிரமாக ஈடுபட்டு தமிழகம் முழுவதும் பல பகுதிகளில் மரக்கன்றுகளை நட்டு வந்தார். தமிழகம் முழுவதும் ஒரு கோடி மரக்கன்றுகளை நடுவது அவர் கனவாக இருந்தது.

இந்நிலையில் அவரது மறைவுக்கு பிறகும் அவரது கனவை நிறைவேற்ற வேண்டும் என பலர் கூறி வருகின்றனர். அந்த வகையில் அவரது கனவை நிறைவேற்றும் வகையில் விஜய் மக்கள் மன்ற ரசிகைகள் சிலர் மரக்கன்று நடும் புகைப்படத்தை இணையத்தில் பதிவிட்டுள்ளனர். அதை தொடர்ந்து பலரும் மரக்கன்றுகள் நட முன்வர வேண்டும் என்ற விழிப்புணர்வு பிரச்சாரம் அதிகரித்துள்ளது.