1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By sinoj
Last Modified: திங்கள், 4 மே 2020 (20:26 IST)

ஆவின் பால் தட்டுப்பாட்டை போக்க நடவடிக்கை ! - ஆவின் நிர்வாகம்

சீனாவில் இருந்து பரவிய கொரொனா வைரஸ் பல்வேறு உலக நாடுகளில் பரவி வருகிறது.இந்தியாவில் மூன்றாது கட்டமாக ஊரடங்கு உத்தரவு இரு வாரங்களுக்கு நீட்டிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், சென்னையில் அன்றாடமும் கொரொனா பாதிப்பு அதிகரித்த வண்ணம் உள்ளது. முக்கியமாக கோயம்பேடு சந்தை மூலமாக பலருக்கும் கொரொனா பரவி வருகிறது.  இங்கு வந்து சென்றவர்கள் மூலமாக பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்தவர்களுக்கு கொரோனா பரவியுள்ளதாக தகவல் வெளியாகிறது.

இந்த நிலையில், சென்னை மாதத்தில் உள்ள ஆவின் பால் பண்ணையில் பணிபுரியும் 2 தொழிலாளர்களுக்கு கொரோனா பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. அவர்கள் இருவரும் பால்பண்ணையில் உள்ள பாக்கிங் செக்சனில் பணிபுரிந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இங்கு மொத்தம் 500க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பணிபுரிந்து வந்த நிலையில், இருவருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டதால் மற்ற பணியாளர்கள் வேலைக்கு வர மறுத்துள்ளதாகத் தெரிகிறது. இதனால் பால் தட்டுப்பாடு ஏற்படும் என்ற தகவல் வெளியாகிறது.

இதுகுறித்துஆவின் நிர்வாகம் கூறியுள்ளதாவது :

சென்னையில் ஆவின் பால் தட்டுப்பாட்டை தவிர்க்க, சேலம், விழுப்புரம், காஞ்சிபுரம், வேலூர், ஆகிய இடங்களில் இருந்து பால் கொண்டு வர ஏற்பாடும் செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளது.