1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By sivalingam
Last Modified: திங்கள், 6 நவம்பர் 2017 (15:28 IST)

வைகோ கிறிஸ்துவ மதத்திற்கு மாறிவிட்டாரா?

மதிமுக பொதுச்செயலாளர் வைகோ கிறிஸ்துவ மதத்திற்கு மாறிவிட்டதாகவும், அவரும் அவருடைய குடும்பத்தினர்களும் தவறாமல் சர்ச்சுக்கு சென்று வருவதாகவும் கூறப்படும் வீடியோ ஒன்று வைரலாகி வருகிறது.



 
 
ஒரு நற்செய்தியாளர் பேசும் இந்த வீடியோவில் அமெரிக்காவில் உள்ள வைகோவின் மகளும் மருமகனும் சர்ச்சுக்கு ஞாயிறு தோறும் ஊழியம் செய்வதாகவும், அவர் ஒரு கட்சி தலைவராக இருப்பதால் அதை அவர் வெளிப்படையாக சொல்லாமல் இருப்பதாகவும், கூடிய விரைவில் இதை அவர் வெளிப்படையாக அறிவிப்பார் என்றும் அந்த நற்செய்தியாளர் கூறியுள்ளார்
 
வைகோ அவர்கள் ஒரு பகுத்தறிவாதி, எந்த மதத்திற்கு ஆதரவாக இல்லாதவர் என்றுதான் இத்தனை வருடங்களாக பொதுமக்கள் எண்ணி வருகின்றனர். ஆனால் இந்த செய்தி அனைவரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது. இதற்கு வைகோ என்ன விளக்கம் கொடுக்க போகிறார் என்பதை தமிழக மக்கள் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.
 
அந்த நற்செய்தியாளரின் வீடியோவை இந்த லிங்குக்கு சென்று பாருங்கள்
https://twitter.com/Vibin8465/status/927384206644166657