1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By sivalingam
Last Modified: செவ்வாய், 17 அக்டோபர் 2017 (16:23 IST)

வைகோவுடன் இளையராஜா இணைவது ஏன்?

இசைஞானி இளையராஜா இதுவரை எந்தவித அரசியலிலும் தலையிடாதவர். கருணாநிதி, ஜெயலலிதா என இரண்டு தலைவர்களின் அன்பை பெற்றவர். இந்த நிலையில் தற்போது திடீரென மதிமுக பொதுச்செயலாளர் வைகோவுடன் இணைந்து செயல்படவுள்ளதாக செய்திகள் வெளிவந்துள்ளது. ஆனால் அரசியல் ரீதியாக அல்ல, இந்த கூட்டணியும் ஒரு திரைப்படத்திற்காகத்தான் என்பது குறிப்பிடத்தக்கது



 
 
சமீபத்தில் சென்னையில் வேலுநாச்சியார் நாட்டிய நாடகம் அரங்கேறியது அனைவரும் அறிந்ததே. இந்த நாடகத்தை பார்க்க நடிகர் சங்க நிர்வாகிகள் மட்டுமின்றி வைகோவும் வந்திருந்தார். நாடகம் முடிந்தவுடன் செய்தியாளர்களிடம் பேசிய வைகோ, 'வேலுநாச்சியார் நாடகத்தை திரைப்படமாக்க விரும்புவதாகவும் இந்த படத்தை தானே தயாரிக்கவிருப்பதாகவும் தெரிவித்தார்.
 
இந்த நிலையில் ஸ்ரீராம்சர்மா என்பவர் இயக்குனராக நியமனம் செய்யப்பட்டு இந்த படத்தின் பணிகள் தொடங்கப்பட்டுள்ளது. வேலுநாச்சியார் கேரக்டரில் நயன்தாரா அல்லது த்ரிஷா நடிக்க வாய்ப்பு இருப்பதாக கூறப்படும் நிலையில் இந்த படத்திற்கு இசையமைக்க இசைஞானி இளையராஜாவிடம் இயக்குனர் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறாராம். இசைஞானியும் பாசிட்டிவ் ஆன பதிலை கூறியுள்ளதால் மிக விரைவில் இதுகுறித்த அதிகாரபூர்வ செய்தி வெளிவரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.