வியாழன், 9 ஜனவரி 2025
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By cauveri manickam
Last Modified: செவ்வாய், 10 அக்டோபர் 2017 (11:21 IST)

வேலு நாச்சியார் கதையைப் படமாகத் தயாரிக்கும் வைகோ

மதிமுக பொதுச் செயலாளரான வைகோ, வேலு நாச்சியார் கதையைப் படமாகத் தயாரிக்கிறார்.
 


 

சுதந்திரப் போராட்டத்தில் ஆங்கிலேயர்களைத் தைரியமாக எதிர்த்தவர் வீரமங்கை வேலுநாச்சியார். அவருடைய கதையை, நாடகமாக பல்வேறு இடங்களில் அரங்கேற்றி வருகிறார் மதிமுகவின் பொதுச் செயலாளரான வைகோ. சென்னை நாரத கான சபாவில், நேற்று இந்த நாடகம் அரங்கேற்றப்பட்டது. இதில், நடிகர் சங்கத் தலைவரான நாசர், செயலாளரான கார்த்தி, விஜயகுமார், ரா.பார்த்திபன், தம்பி ராமையா உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். வேலு நாச்சியாரின் கதையை எல்லோரும் அறிந்துகொள்ள வேண்டும் என்பதால், அதை தன்னுடைய கண்ணகி ஃபிலிம்ஸ் சார்பில் படமாக எடுக்க இருப்பதாக வைகோ தெரிவித்துள்ளார்.