1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sinoj
Last Modified: வெள்ளி, 28 ஜூலை 2023 (21:35 IST)

மாணவிகள் 402 பேருக்கு விலையில்லா மிதிவண்டிகளை வழங்கிய மேயர் கவிதா கணேசன்

karur
கரூரில் அரசு உதவி பெறும் பள்ளியை சேர்ந்த 12-ஆம் வகுப்பு மாணவிகள் 402 பேருக்கு விலையில்லா மிதிவண்டிகளை மேயர் கவிதா கணேசன் வழங்கினார்.
 
கரூர் மாநகராட்சிக்கு உட்பட்ட காந்திகிராமம் பகுதியில் அமைந்துள்ள புனித தெரசா பெண்கள் அரசு உதவி பெறும் மேல்நிலைப்பள்ளி மாணவிகளுக்கு பள்ளிக் கல்வித் துறை சார்பில் விலையில்லா மிதிவண்டிகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் கரூர் மாநகராட்சி மேயர் கவிதா கணேசன் கலந்து கொண்டு 402 மாணவிகளுக்கு விலையில்லா மிதிவண்டிகளை வழங்கி சிறப்புரையாற்றினார். 
 
இதில் தனியார் மெட்ரிக் பள்ளி மாவட்ட கல்வி அலுவலர் செல்வமணி, மாநகராட்சி  மண்டல குழு தலைவர் ராஜா உள்ளிட்ட அரசுத்துறை அதிகாரிகள் மற்றும் ஆசிரியர்கள் பலர் கலந்து கொண்டனர்.