1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Siva
Last Updated : செவ்வாய், 25 ஜூலை 2023 (08:12 IST)

தமிழகம் போலவே புதுச்சேரியிலும்.. அரசு பள்ளி மாணவர்களுக்கு சிறப்பு ஒதுக்கீடு..!

தமிழகத்தில் மருத்துவ படிப்பில் அரசு பள்ளி மாணவர்களுக்கு 10% இட ஒதுக்கீடு வழங்கப்பட்டு வருகிறது. இதன் காரணமாக அரசு பள்ளியில் படித்த மாணவ மாணவிகள் அதிகம் பேர் மருத்துவ கல்லூரியில் தற்போது படித்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. 
 
இந்த நிலையில் தமிழகத்தை போலவே புதுச்சேரியிலும் அரசு பள்ளியில் படிக்கும் மாணவர்களுக்கு மருத்துவ படிப்பில் 10% இட ஒதுக்கீடு வழங்க புதுச்சேரி அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.
 
ஒப்புதலுக்கான கோப்பை துணைநிலை ஆளுநருக்கு அனுப்ப உள்ளதாக புதுச்சேரி முதலமைச்சர் ரங்கசாமி அறிவித்துள்ளார். இது அமலுக்கு வந்தால் இதன் மூலமாக 37 இடங்கள் எம்.பி.பி.எஸ், 11 பல் மருத்துவ இடங்களில் படிக்க அரசு பள்ளி மாணவர்களுக்கு வாய்ப்பு கிடைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.
 
Edited by Siva