வெள்ளி, 27 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By siva
Last Updated : திங்கள், 15 மார்ச் 2021 (13:26 IST)

மேளதாளத்துடன் வேட்புமனுவை தாக்கல் செய்த நடிகர் மயில்சாமி!

காமெடி நடிகர் மயில்சாமியின் ஒரு தீவிர எம்ஜிஆர் ரசிகர் என்பதும், ஜெயலலிதா இருந்தவரை அதிமுகவின் ஆதரவாளராக இருந்தார் என்பதும் தெரிந்ததே
 
இந்த நிலையில் ஜெயலலிதாவை மறைவுக்கு பின்னர் திமுகவில் இருந்து வெளியே வந்து அதிமுக தலைவர்களை கடுமையாக விமர்சனம் செய்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் வரும் சட்டமன்ற தேர்தலில் சென்னை விருகம்பாக்கம் தொகுதியில் சுயேச்சையாக போட்டியிட அவர் சற்று முன் வேட்பு மனு தாக்கல் செய்தார்
 
தாரைதப்பட்டை மேளதாளத்துடன் அவர் தனது ஆதரவாளர்களுடன் வந்து வேட்பு மனுவை தாக்கல் செய்தார். விருகம்பாக்கம் தொகுதியை பொறுத்தவரை பொதுமக்களுக்கு நன்கு அறிமுகமானவர் மயில்சாமி என்பதும் சென்னை வெள்ளம், கொரோனா ஊரடங்கு சமயத்தில் அந்த பகுதி மக்களுக்கு எந்தவிதமான விளம்பரமும் இன்றி பல உதவிகளை அவர் செய்துள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது