வெள்ளி, 22 நவம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Modified: வெள்ளி, 24 ஏப்ரல் 2020 (08:23 IST)

மே மாத ரேஷன் பொருட்களுக்கான டோக்கன்: தமிழக அரசின் முடிவில் திடீர் மாற்றம்

கொரோனா வைரஸ் காரணமாக மே மாதம் வழங்கவிருக்கும் ரேசன் பொருட்களுக்கான டோக்கன் ஏப்ரல் 24 ஆம் தேதி அதாவது இன்றும் தொடங்கி நாளை வரை வீடு வீடாக டோக்கன் வழங்கப்படும் என தமிழக அரசு தெரிவித்திருந்தது. அந்த டோக்கன்களில் ரேசன் பொருட்கள் வாங்க வேண்டிய தேதி மற்றும் நேரம் அனைத்தும் குறிப்பிடப்பட்டிருக்கும் என்பதும், டோக்கன்களை பெற்றவர்கள் அதில் குறிப்பிட்டிருக்கும் நேரத்தில் மட்டுமே குடும்ப அட்டையுடன் வந்து பொருட்களை பெற்றுக்கொள்ளலாம் எனவும் தமிழக அரசு தெரிவித்து இருந்தது
 
இந்த நிலையில் தற்போது இந்த அறிவிப்பில் ஒரு சிறு மாற்றம் ஏற்பட்டுள்ளது. அதன்படி டோக்கன் வழங்கும் தேதி ஏப்ரல் 24க்கு பதிலாக மே 2 மற்றும் 3 ஆம் தேதிகளில் வழங்கப்படும் எனவும் மே 4 முதல் ரேஷன் கடைகளில் ரேஷன் பொருட்களை பெற்று கொள்ளலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
 
இந்த நடைமுறையை அனைவரும் சரியாக கடைபிடிக்க வேண்டும் எனவும் ரேஷன் பொருட்களை வாங்க வருபவர்கள் கண்டிப்பாக சமூக இடைவெளியை கடைபிடிக்க வேண்டும் என்றூம், ரேசன் பொருட்களுக்கு எந்த விலையும் இல்லை எனவும் தமிழக அரசு அறிவுறுத்தியுள்ளது. 
 
இந்த டோக்கன்களுக்கு ஒரு கிலோ சர்க்கரை, ஒரு கிலோ துவரம்பருப்பு, ஒரு கிலோ சமையல் எண்ணெய், அரிசி உள்ளிட்டவை இலவசமாக வழங்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது