திங்கள், 27 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Prasanth Karthick
Last Modified: செவ்வாய், 21 ஏப்ரல் 2020 (11:44 IST)

மே 4 முதல் பேருந்து சேவையா? மாஸ்க் அணியா விட்டால் பேருந்தில் ஏற தடை:!

சென்னை மாநகராட்சி பேருந்துகளில் பயணிக்க மே 4 முதல் புதிய விதிமுறைகள் அறிவிக்கப்பட்டுள்ளது.

நாடு முழுவதும் கொரோனா பாதிப்பால் இரண்டாவது கட்ட ஊரடங்கு அமலில் உள்ளது. மே 3 உடன் இந்த ஊரடங்கு முடிய உள்ள நிலையில், கொரோனா பாதிப்பு குறையாவிட்டால் ஊரடங்கு நீட்டிக்கப்படுமா என்ற கேள்வியும் உள்ளது.

இந்நிலையில் சென்னை மாநகர போக்குவரத்து கழகம் சுற்றறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில் மே 4 முதல் பின்பற்ற வேண்டிய விதிமுறைகள் குறித்து விளக்கப்பட்டுள்ளன.

அதன்படி, மாஸ்க் அணியாதவர்களை பேருந்தில் ஏற அனுமதிக்க கூடாது.
ஓட்டுனர்களும், நடத்துனர்களும் குறிப்பிட்ட நேர இடைவெளிக்கு ஒருமுறை கைகளை சோப்பு, சானிட்டைசர் பயன்படுத்தி சுத்தம் செய்து கொள்ள வேண்டும்.

பேருந்துகளில் பயணிகள் இடையே சமூக இடைவெளி இருக்குமாறு பார்த்துக் கொள்ள வேண்டும் என பல்வேறு விதிமுறைகள் அறிவிக்கப்பட்டுள்ளன.

இதனால் மே 4 முதல் சென்னையில் போக்குவரத்து சேவைகள் தொடங்கப்படுகின்றதா என்ற கேள்வி எழுந்துள்ளது. ஆனால் ஊரடங்கு நிறைவுறும் சூழலில் மேற்கொள்ள வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கையாகவே இந்த சுற்றறிக்கை போக்குவரத்து ஊழியர்களுக்கு அளிக்கப்பட்டுள்ளதாகவும், அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் தமிழக அரசின் முடிவை தொடர்ந்தே இருக்கும் எனவும் கூறப்படுகிறது.