வியாழன், 23 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sinoj
Last Updated : வெள்ளி, 17 நவம்பர் 2023 (22:24 IST)

திருவண்ணாமலையில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்- பாஜக அறிவிப்பு

திருவண்ணாமலை மாவட்டத்தில் சிப்காட் அமைக்க விவசாயிகள் எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடத்திய நிலையில் அவர்கள் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

இந்த நிலையில்  விவசாயிகள் கைது செய்யப்பட்டதற்கு எதிர்க்கட்சித் தலைவகள்  எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

இந்த நிலையில் ‘’கைது செய்யப்பட்ட விவசாயிகள் மற்றும் அவர்களது குடும்பத்திற்கு முழு ஆதரவு மற்றும் சட்ட உதவியை பாஜக தரும்’’ என்று தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தெரிவித்திருந்தார்.

இதுகுறித்து அண்ணாமலை தெரிவித்துள்ளதாவது:

‘’விவசாயிகள் மீது குண்டர் சட்டம் போடப்பட்டது நாளிதழில் பார்த்துத் தெரிந்துக் கொண்டதாகவும், தொழிற்சாலைகளை வானத்திலா கட்ட முடியும் என்று  விவசாயிகளை கொச்சைப்படுத்தியும் பேசிய அமைச்சர் எ.வ. வேலு அவர்களுக்கு சார்பாக கண்டனங்களை’’ தெரிவித்துக் கொள்கிறோம்.

மேலும், ‘’திருவண்ணாமலை மாவட்டத்தில், விவசாய நிலங்களை ஆக்கிரமிக்க முயற்சித்த திமுக அரசை எதிர்த்து அமைதியான முறையில் போராட்டம் நடத்திய விவசாயிகளை, குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்த திமுக அரசின் அடக்குமுறையைக் கண்டித்து, நாளைய தினம் (18/11/2023),  தமிழக பாஜக சார்பாக, தலைவர்கள், நிர்வாகிகள், தொண்டர்கள் மற்றும் பொதுமக்கள் பங்கேற்கும் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் திருவண்ணாமலையில் நடைபெறும் என்பதனைத் தெரிவித்துக் கொள்கிறோம்’’ என்று தெரிவித்துள்ளார்.