1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By siva

சென்னையில் கனமழை: 15 விமானங்கள் தாமதம்!

Flights
சென்னையில் நேற்று இரவு திடீரென மழை பெய்ததால் காரணமாக சென்னையில் இருந்து புறப்பட வேண்டிய 15 விமானங்கள் தாமதமாக புறப்பட்டுச் சென்றதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
 
சென்னையில் நேற்று இரவு திடீரென பலத்த காற்றுடன் கூடிய கனமழை பெய்தது. இதன் காரணமாக சாலைகளில் நீர் தேங்கி நின்றதால் வாகன ஓட்டிகள் கடும் அவதிப்பட்டனர்.
 
 இந்த நிலையில் கனமழை காரணமாக சென்னையில் இருந்து புறப்பட வேண்டிய 8 சர்வதேச விமானங்கள் உள்பட 15 விமானங்கள் தாமதமாக வந்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அதுமட்டுமின்றி 31 விமானாங்களின் சேவைகள் பாதிக்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது. 
 
மலேசியா தாய்லாந்து டெல்லி ஹைதராபாத் ஆகிய இடங்களில் இருந்து சென்னைக்கு வந்த 12 விமானங்கள் நடுவானில்  தத்தளித்ததாக விமான நிலைய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்
 
மேலும் ஜெர்மனி துபாய் மும்பை ஆகிய பகுதிகளில் இருந்து வந்த விமானங்கள் தரையிறங்க முடியாமல் இருந்ததால் ஐதராபாத் பெங்களூரு விமான நிலையங்களுக்கு திருப்பி விடப்பட்டது தகவல்கள் வெளியாகியுள்ளன.