வியாழன், 26 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. விமர்சனம்
Written By siva

சென்னையில் இன்றைய பெட்ரோல், டீசல் விலை நிலவரம்!

petrol
சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெயின் விலை குறைந்து வருவதன் காரணமாக சென்னையில் கடந்த ஒரு மாதமாக பெட்ரோல் டீசல் விலையில் மாற்றம் இல்லை என்பதை பார்த்து வருகிறோம். 
 
அதுமட்டுமின்றி ரஷ்யாவிடமிருந்து சலுகை விலையில் கச்சா எண்ணையை இந்திய எண்ணெய் நிறுவனங்கள் வாங்கி வருவதால் இப்போதைக்கு பெட்ரோல் டீசல் விலை உயர வாய்ப்பில்லை என்றும் மாறாக குறைய வாய்ப்பிருப்பதாகவும் கூறப்பட்டது.
 
இந்த நிலையில் இன்று சென்னையில் பெட்ரோல் டீசல் விலையில் மாற்றமில்லை என எண்ணெய் நிறுவனங்கள் அறிவித்துள்ளன. இதனையடுத்து இன்று சென்னையில் பெட்ரோல் விலை ஒரு லிட்டர் ரூபாய் 102.63 எனவும் டீசல் விலை ஒரு லிட்டர் ரூபாய் 94.24 எனவும் விற்பனையாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது