1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
  4. Marudhu alaguraj says about ops and eps

புழலுக்கு எடப்பாடியும், புனித ஜார்ஜ் கோட்டைக்கு ஓ.பி.எஸ்.ம் செல்லும் காலம் வரும்: மருது அழகுராஜ்

ops eps
புழல் ஜெயிலுக்கு எடப்பாடி பழனிசாமியும், புனித ஜார்ஜ் கோட்டைக்கு ஓபிஎஸ் செல்லும் காலம் விரைவில் வரும் என மருது அழகுராஜ் கூறியிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 
 
தற்போது எடப்பாடி பழனிச்சாமி மற்றும் ஓ பன்னீர்செல்வம் இடையிலான பிரச்சனை பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வரும் நிலையில் பழனிச்சாமி மற்றும் ஓபிஎஸ் ஆதரவாளர்கள் பல்வேறு கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர் 
 
அந்த வகையில் ஓ பன்னீர்செல்வம் ஆதரவாளர் மருது அழகுராஜ் கூறியபோது, ‘நான் மட்டுமே அதிபர் என்று ஒப்புக்கொள்ள வேண்டும் என கூறும் இடி அமீன் எடப்பாடியை விட்டு நிர்வாகிகளும் தொண்டர்களும் விலகி ஓபிஎஸ் பக்கம் வர தொடங்கி விட்டார்கள் என்று கூறினார் 
 
மேலும் புழல் ஜெயிலுக்கு எடப்பாடி பழனிசாமியும், புனித ஜார்ஜ் கோட்டைக்கு ஓபிஎஸ் அவர்களும் செல்லும் காலம் உருவாகும் என்றும் அவர் தெரிவித்துள்ளார் அவருடைய இந்த பேச்சு பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது
 
 
அடுத்த கட்டுரையில்
ஜெயலலிதா மரணம்: ஆறுமுகசாமி ஆணையம் அறிக்கை தாக்கல் செய்வது எப்போது?