திங்கள், 23 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sugapriya Prakash
Last Modified: வெள்ளி, 19 ஆகஸ்ட் 2022 (12:07 IST)

எது நடக்கப் போகிறதோ அதுவும் நன்றாகவே நடக்கும் - ஈபிஎஸ் சூசகம்!

எடப்பாடி பழனிச்சாமி தனது அதிகாரப்பூர்வ டிவிட்டர் பக்கத்தில் எது நடக்கப் போகிறதோ அதுவும் நன்றாகவே நடக்கும் என டிவிட். 
 
கடந்த ஜூலை 11ம் தேதி நடந்த அதிமுக பொதுக்குழு கூட்டத்தில் எடப்பாடி பழனிசாமி இடைக்கால பொதுசெயலாளராக தேர்ந்தெடுக்கப்பட்டதுடன், கட்சியின் ஒருங்கிணைப்பாளரான ஓ.பன்னீர்செல்வம் மற்றும் அவரது ஆதரவாளர்களும் அதிமுகவிலிருந்து நீக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டது. 
 
இந்த பொதுக்குழு கூட்டத்தை எதிர்த்து ஓபிஎஸ் தரப்பில் தொடர்ந்த மனுவை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம் ஜூலை 11 அன்று நடந்த பொதுக்குழு செல்லாது என்றும், ஜூன் 23ல் இருந்த நடைமுறையே தொடரும் என்று உத்தரவிட்டது.
 
அதை தொடர்ந்து தற்போது மீண்டும் அதிமுகவின் ஒருங்கிணைப்பாளராகவே ஓ.பன்னீர்செல்வம் நீடிக்கிறார். இந்நிலையில் நீதிமன்றத்தில் இந்த உத்தரவை எதிர்த்து எடப்பாடி பழனிசாமி தரப்பில் மேல்முறையீடு செய்துள்ளனர். அதே சமயம் இதை வாய்ப்பாக பயன்படுத்தி தனக்கான ஆதரவை நிலைநாட்ட ஓபிஎஸ் காய் நகர்த்தி வருகிறார்.
 
இந்நிலையில் கிருஷ்ண ஜெயந்தி நாளில் சூசகமாக எடப்பாடி பழனிச்சாமி தனது அதிகாரப்பூர்வ டிவிட்டர் பக்கத்தில், எது நடந்ததோ, அது நன்றாகவே நடந்தது; எது நடக்கிறதோ அது நன்றாகவே நடக்கிறது; எது நடக்கப் போகிறதோ அதுவும் நன்றாகவே நடக்கும் என்ற ஶ்ரீகிருஷ்ணரின் உபதேசத்தை மனதில் கொண்டு அனைத்து மக்களின் நன்மைக்கு உழைப்போம் என்று கிருஷ்ண ஜெயந்தி நன்னாளில் நாம் அனைவரும் உறுதியேற்போம் என பதிவிட்டுள்ளார்.