கமலாவுக்குதான் வெற்றி!? அமெரிக்கா தேர்தலுக்கு மன்னார்குடியில் சிறப்பு பூஜை!

Kamala Harris
Prasanth Karthick| Last Modified செவ்வாய், 3 நவம்பர் 2020 (10:58 IST)
அமெரிக்க தேர்தலில் போட்டியிடும் இந்திய வம்சாவளியான கமலா ஹாரிஸ் வெற்றிபெற வேண்டும் என மன்னார்குடியில் சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டு வருவது வைரலாகியுள்ளது.

அமெரிக்க தேர்தலில் ஜனநாயக கட்சியின் சார்பில் துணை அதிபர் பதவிக்கு கமலா ஹாரிஸ் போட்டியிடுகிறார். கமலா ஹாரிஸின் தாத்தா கோபாலன் தமிழகத்தின் மன்னார்குடி அருகே உள்ள துளசேந்திரபுரத்தை சேர்ந்தவர். முன்னதாக கமலா ஹாரிஸ் தேர்தலில் போட்டியிடுகிறார் என தெரிந்ததுமே மன்னார்குடி சுற்றுவட்டார பகுதிகளில் கமலா ஹாரிஸ் வெற்றிபெற வாழ்த்தி போஸ்டர்கள் ஒட்டப்பட்டிருந்தன.

இந்நிலையில் அமெரிக்க தேர்தல் நடைபெற உள்ள நிலையில் கமலா ஹாரிஸ் வெற்றி பெற வேண்டும் என கோபாலனின் சொந்த ஊரான துளசேந்திரபுரத்தில் உள்ள கோவில் சிறப்பு வேண்டுதல்கள் மற்றும் பூஜைகளை மக்கள் நடத்தி வருகின்றனர். அமெரிக்க தேர்தலுக்காக இந்தியாவில் சிறப்பு பூஜை நடத்துவது இதுவே முதன்முறை என கூறப்படுகிறது.இதில் மேலும் படிக்கவும் :