வியாழன், 23 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Prasanth Karthick
Last Modified: செவ்வாய், 22 செப்டம்பர் 2020 (11:56 IST)

அமமுகவுக்கு பறிபோகும் அதிமுகவினர் பதவிகள்! – போராட்டத்தில் குதித்த அதிமுகவினர்!

புதிதாக அதிமுகவில் இணையும் அமமுகவினருக்கு பதவிகள் அளிக்கப்படுவதை கண்டித்து அதிமுகவினர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

தமிழகத்தில் விரைவில் சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ள நிலையில் தமிழக அரசியல் கட்சிகள் தங்களது கட்சிகளுக்கு உறுப்பினர்களை சேர்க்கும் பணியில் ஈடுபட்டுள்ளன. இந்நிலையில் சில மாதங்களாக பல கட்சிகளை சார்ந்தோர் வேறு கட்சிகளுக்கு மாறுவதும், அவர்கள் புதிதாக சேரும் கட்சிகளில் பதவிகள் வழங்கப்படுவதும் மேல் மட்டத்திலிருந்து அனைத்து தரப்பிலும் நடந்து வருகிறது.

இந்நிலையில் நீலகிரி மாவட்டம் கூடலூர் பகுதியில் அமமுகவிலிருந்து புதிதாக அதிமுகவில் இணைந்த உறுப்பினர்களுக்கு உயர் பதவிகள் அளிக்கப்பட்டிருப்பதை கண்டித்து அதிமுகவினர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். அதிமுகவில் பல ஆண்டுகளாக இருந்து வரும் அதிமுக தொண்டர்களுக்கு மரியாதை இல்லை என்று அவர்கள் குற்றம் சாட்டியுள்ளனர். சட்டமன்ற தேர்தல் நெருங்கி வரும் நிலையில் இந்த போராட்டம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.