வெள்ளி, 27 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By mahendran
Last Modified: வெள்ளி, 1 அக்டோபர் 2021 (13:25 IST)

நிர்வாணமாக சென்று ஷோரூம்களில் திருடிய வினோத நபர்… சிசிடிவி கேமராவில் சிக்கி கைது!

கோவை சிங்காநல்லூர் பகுதியில் உள்ள இரு சக்கர வாகன ஷோரூம்களில் அடுத்தடுத்து திருட்டு சம்பவங்கள் நடந்தன.

இது சம்மந்தமாக காவல் நிலையத்தில் புகார்கள் வந்ததை அடுத்து அனைத்து ஷோரூம்களில் இருந்த சிசிடிவி காட்சிகளையும் பார்த்துள்ளனர் போலிஸார். அதில் ஒரு நபர் நிர்வாணமாக வந்து பணம் உள்ளிட்டவற்றை திருடி சென்றுள்ளார். இதையடுத்து போலிஸார் நடத்திய தேடுதலில் கோச்சடை பாண்டியன் என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

அவர் சிவகங்கை மாவட்டத்தைச் சேர்ந்தவர் என்பதும் ஹோட்டலில் வேலை செய்து வந்த நிலையில் கொரோனாவால் அந்த வேலை பறிபோனதால் திருட்டு சம்பவங்களில் ஈடுபட்டதாகவும் விசாரணையில் தெரியவந்துள்ளது. நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த பட்ட அவர் இப்போது சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.