அரை நிர்வாணமாக நின்ற இளைஞர்… தவறாகப் புரிந்து கொண்ட மக்கள் – ஒரு உயிர் போன பரிதாபம் !

கோப்புப் படம்
Last Modified சனி, 15 பிப்ரவரி 2020 (08:26 IST)
கோப்புப் படம்

விழுப்புரம் மாவட்டத்தில் ஊர்மக்கள் இளைஞர் ஒருவரைத் தவறாக புரிந்து கொண்டதால் அதிர்ச்சிகரமான சம்பவம் ஒன்று நடந்துள்ளது.

விழுப்புரம் மாவட்டம் செஞ்சியை அடுத்துள்ள காரை என்ற கிராமத்தை சேர்ந்தவர் பெட்ரோல் பங்க் ஊழியர் சக்திவேல். இவர் வழக்கம்போல நேற்று மதியம் பணிக்காக இரு சக்கரவாகனத்தில் சென்றுள்ளார். அப்போது அவருக்கு இயற்கை உபாதைகள் வரவே மலம் கழிப்பதற்காக ஒரு இடத்தில் இறங்கியுள்ளார். ஒதுக்குபுறமாக இருந்த இடத்தில் இறங்கி ஆடைகளைக் கழட்டியுள்ளார்.

அவர் இப்படி நிற்பதை வயலில் வேலை செய்த பெண்கள் பார்த்து கத்திக் கூச்சல் போட்டுள்ளனர். இதனால் அந்த ஊர் ஆண்கள் அவரைத் துரத்த ஆரம்பித்துள்ளனர். இத்தனைப் பேர் துரத்திவருவதைப் பார்த்த அவர் பதற்றத்தில் அங்கிருந்து ஓடவே அவரை விரட்டி பிடித்த ஊர் பொதுமக்கள் கட்டிவைத்து ரத்தம் வரும் அளவுக்கு அடித்துள்ளனர். இந்த தகவல் அறிந்து போலிஸார் வந்து அவரிடம் விசாரணை நடத்தினர். அப்போது நடந்ததை அவர் சொல்ல அவரை வீட்டுக்கு அனுப்பியுள்ளனர்.

வீட்டுக்கு சென்ற சக்திவேல் சிறிது நேரத்தில் உடனே மயங்கி விழுந்து உயிரிழந்தார். இந்த சம்பவமானது அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


இதில் மேலும் படிக்கவும் :