திங்கள், 30 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By sinoj kiyan
Last Updated : புதன், 12 பிப்ரவரி 2020 (18:06 IST)

பேருந்து சக்கரத்தில் சிக்கிய இளைஞர்கள்... பதரவைக்கும் சிசிடிவி காட்சிகள் !

பேருந்து சக்கரத்தில் சிக்கிய இளைஞர்கள்... பதரவைக்கும் சிசிடிவி காட்சிகள்
கோவையில் ஒரு திருப்பத்தில் அரசு பேருந்தும் இரு சக்கர வாகனமும் மோதி விபத்து.  பைக்கில் சென்ற இளைஞர்கள் நூலிழையில் உயிர் தப்பினர். 
 
கோவையில் உள்ள ஒரு பகுதியில்  அரசுப் பேருந்து ஒரு திருப்பத்தில் வேகமாக வளையும் போது, அவ்வழியே டூவீலரில் வந்த இளைஞர் பேருந்து வளைந்து செல்வதைக் கவனிக்காமல் தொடர்ந்து சென்று கொண்டிருந்தார். 
 
அப்போது, பைக், பேருந்தின் முன் சக்கரத்தில்  சிக்கி இழுத்துக் கொண்டு போனது, நல்லவேளையாக அந்த ஸ்டாப்பில் பயணிகள் இறங்க வேண்டி இருந்ததால் ஒட்டுநர் பேருந்தை நிறுத்தினார். அதன்பின், பயணிகள் பார்த்து சக்கரத்துக்கு அடியில் இருவர் இருப்பதைப் பார்த்து கூச்சல் போட்டுள்ளனர்.
 
அதன் பிறகு இரு இளைஞர்களும் மீக்கப்பட்டனர். நல்லவேளையாக இருவரும் நூலிழையில் உயிர்தப்பினர். இந்த வீடியோ அங்குள்ள சிசிடிவியில் பதிவாகியுள்ளது. தற்போது இக்காட்சிகள் வைரல் ஆகி வருகிறது.