செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Modified: வெள்ளி, 29 நவம்பர் 2019 (14:48 IST)

8 கோடி கிடைத்ததாக சொல்லிய நபர் – அதனால் உயிரை விட்ட விந்தை !

சென்னை டாஸ்மாக் பாரில் மது அருந்தி கொண்டிருந்தபோது தனக்கு 8 கோடி ரூபாய் கிடைத்ததாக சொன்ன முருகன் என்பவர் அடித்துக் கொலை செய்யப்பட்டுள்ளார்.

தாம்பரத்தில் உள்ள டாஸ்மாக் கடை ஒன்றுக்கு  சில நாள்களுக்கு முன்பு முருகன் என்பவர் தனது நண்பரகளுடன் மது அருந்த சென்றுள்ளார். அப்போது தடபுடலாக அனைவருக்கும் செலவு செய்த முருகன், டாஸ்மாக் பையனுக்கு 2000 ரூபாய் டிப்ஸ் கொடுத்துள்ளார்.

இதைப்பற்றி நண்பர்கள் விசாரித்த போது ‘எனக்கு ஒரு பை கிடைத்து அதில் கட்டுக்கட்டாக எட்டு கோடி ரூபாய் பணம் இருந்தது .’ எனக் கூறியுள்ளார். இதைப் பக்கத்தில் உட்கார்ந்து மரு அருந்திக் கொண்டிருந்த ஒரு கும்பல் கேட்டுள்ளது. அதையடுத்து முருகனின் முகவரியைக் கண்டுபிடித்து அவர் வீட்டுக்கு சென்று மனைவியிடம் தாங்கள் போலிஸ் என சொல்லி முருகனை விசாரித்துள்ளது. இதையறிந்த முருகன் தனது சொந்த ஊருக்குத் தலைமறைவாகியுள்ளார்.

இதையறிந்த கும்பல் முருகனின் மனைவி மற்றும் மகனை அழைத்துக் கொண்டு முருகனின் ஊருக்கு சென்று அவரை அழைத்து வந்து ஒரு மர்ம இடத்தில் வைத்து கொடூரமாகத் தாக்கியுள்ளனர். இதில் முருகன் உயிரிழக்க இது சம்மந்தமாக வெளியே யாருக்கும் சொல்லாவிட்டால் உங்களை உயிரோடு விடுவதாக முருகனின் மனைவியிடம் சொல்லியுள்ளது. அவர்களும் உயிரைக் காப்பாற்றிக் கொள்ள சம்மதித்துள்ளனர்.

ஊருக்கு அடக்கம் செய்ய கொண்டுவந்த முருகனின் உடலைப் பார்த்து உறவினர்கள் விசாரிக்க முருகனின் மனைவி உண்மையை சொல்லியுள்ளார். இதையடுத்து போலிஸ் புகாரளிக்க போலிஸ் அருண்பாண்டியன் உள்ளிட்ட 11 பேரை காவல் துறை கைது செய்து விசாரணை செய்து வருகிறார்கள். முருகனுக்கு 8 கோடி கிடைத்தது உண்மைதானா என்பது குறித்தும் விசாரணை நடத்தி வருகின்றனர்.