1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: திங்கள், 12 அக்டோபர் 2020 (15:08 IST)

சர்வானந்துடன் ஜோடி சேரும் சைக்கோ நாயகி – 7 வருடங்களுக்குப் பின் தெலுங்கில் நடிக்கும் நடிகர்!

நடிகை அதிதி ராவ் ஹையாத்ரி நடிக்கும் புதிய படத்தில் சர்வானந்த மற்றும் சித்தார்த் ஆகிய இருவரும் நடிக்கவுள்ளனர்.

தெலுங்கில் கடந்த ஆண்டு வெளியான  ஆர் எக்ஸ் 100 என்ற திரைப்படம் மிகப்பெரிய வெற்றி பெற்றது. அதையடுத்து அந்த படத்தின் இயக்குனர் அஜய் பூபதி இயக்கும் புதிய படத்தில் சர்வானந்த் மற்றும் சித்தார்த் ஆகிய இருவரும் கதாநாயகர்களாக நடிக்கிறார்கள். இந்த படத்தில் கதாநாயகியாக நடிக்க சைக்கோ படப்புகழ் அதிதி ராவ் ஹையாத்ரி ஒப்பந்தமாகியுள்ளார்.

மஹா சமுத்திரம் என பெயரிடப்பட்டுள்ள இந்த படத்தில் 7 ஆண்டுகளுக்குப் பிறகு தெலுங்கு சினிமாவில் நடிக்கிறார் சித்தார்த்.