திங்கள், 23 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By mahendran
Last Modified: திங்கள், 18 அக்டோபர் 2021 (13:05 IST)

போன் வெடித்து இளைஞர் பலி! கோவையில் நடந்த அதிர்ச்சி சம்பவம்!

கோவையில் செல்போன் வெடித்து சிவராம் என்ற இளைஞர் உயிரிழந்துள்ளார்.

கோவை மாவட்டம் மதுக்கரை காந்தி நகரைச் சேர்ந்த மயில்சாமி என்பவரின் மகன் சிவராம்.  இவர் இரவில்  தன்னுடைய ஸ்மார்ட் போனை சார்ஜ் போட்டுள்ளார். அப்போது ஒரு அழைப்பு வரவே சார்ஜரை கழட்டாமலேயே பேசியுள்ளார். அப்போது பேசிக்கொண்டிருக்கும் போதே அவரின் ஸ்மார்ட்போன் வெடித்து தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இந்த விபத்தில் சிவராம் உயிரிழந்துள்ளார்.