செவ்வாய், 7 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sugapriya Prakash
Last Modified: வெள்ளி, 12 நவம்பர் 2021 (13:34 IST)

கல்லறை தோட்டத்தில் மயங்கி கிடந்த நபர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்

காவல் ஆய்வாளர் ராஜேஸ்வரி மீட்டு மருத்துவமனையில் அனுமதித்த நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

 
சென்னையில் கனமழை பெய்த நிலையில் டிபி சத்திரம் கிறிஸ்தவ கல்லறை ஒன்றில் மரம் சாய்ந்ததில் அங்கு தங்கியிருந்த நபர் காயமடைந்துள்ளார். அவர் மயக்கமடைந்து மரத்தின் அடியிலேயே கிடந்துள்ளார்.
 
மரத்தை அகற்றியபோது அவருக்கு மூச்சு இருப்பதை பார்த்த அண்ணா நகர் பெண் காவல் ஆய்வாளர் ராஜேஸ்வரி உடனே அந்த இளைஞரை தன் தோளில் தூக்கி ஓடினார். அங்கிருந்த ஆட்டோவை வர செய்து அதில் இளைஞரை வைத்து மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளார்.
 
அவர் இளைஞரை காப்பாற்றிய வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகியுள்ள நிலையில் பலரும் பாராட்டுகளை தெரிவித்துள்ளனர். இந்நிலையில் இதுகுறித்து தகவலறிந்த முதல்வர் மு.க.ஸ்டாலின், பெண் காவல் ஆய்வாளர் ராஜேஸ்வரியை நேரில் பாராட்டி அவருக்கு சான்றிதழும் வழங்கி கௌரவித்தார்.
 
இந்நிலையில் சென்னை கீழ்பாக்கம் கல்லறை தோட்டத்தில் மயங்கி கிடந்த நபர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட உதயா சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.