1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Mahendran
Last Updated : வெள்ளி, 12 நவம்பர் 2021 (00:16 IST)

முதல்வரே பாராட்டிவிட்டார், வேறு என்ன வேண்டும்: காவல் ஆய்வாளர் ராஜேஸ்வரி நெகிழ்ச்சி..!

முதல்வரே பாராட்டிவிட்டார், வேறு என்ன வேண்டும்: காவல் ஆய்வாளர் ராஜேஸ்வரி நெகிழ்ச்சி..!
என்னை முதலமைச்சர் அவர்களே பாராட்டி விட்டார் அதை விட வேறு என்ன வேண்டும் என அண்ணாநகர் காவல் துறை ஆய்வாளர் ராஜேஸ்வரி அவர்கள் நெகிழ்ச்சியுடன் கூறியுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது 
 
இன்று அண்ணா நகர் காவல் துறை ஆய்வாளர் ராஜேஸ்வரி அவர்கள் மரத்தின் கீழ் இருந்த இளைஞர் ஒருவரை காப்பாற்றினார். இது குறித்த வீடியோ இணையதளங்களில் வைரலாக வந்தது என்பதும் அரசியல் கட்சி பிரமுகர்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் பலர் அவரது செயலுக்கு பாராட்டினார் என்பது குறிப்பிடத்தக்கது
 
இந்த நிலையில் தமிழக முதலமைச்சர் முக ஸ்டாலின் அவர்கள் காவல் ஆய்வாளர் ராஜேஸ்வரி அவர்களை பாராட்டினார். இந்த பாராட்டு குறித்து நெகிழ்ச்சியுடன் கூறிய அந்த ஆய்வாளர்கள் முதலமைச்சரே என்னை பாராட்டியுள்ளார் என்னை போன்றவர்களுக்கு வேறு என்ன வேண்டும் என்று அவர் தெரிவித்துள்ளார்