வியாழன், 26 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Modified: செவ்வாய், 19 பிப்ரவரி 2019 (10:30 IST)

ஆசை வார்த்தை கூறி சிறுமி பாலியல் பலாத்காரம் ...வேளாங்கண்ணியில் பரபரப்பு

நாகை மாவட்டம் வேளாங்கண்ணியில்  15 வயது  சிறுமியை 4 நாட்களாக ஒரு விடுதியில் அடைத்து வைத்து பாலியல் பலாத்காரம் செய்த 3 கொடூரர்களை போலீஸார் செய்துள்ளனர்.
நாகை மாவட்டம் வெளிப்பாளையத்தில் உள்ள  காவல் நிலையத்தில் தன் மகளை காணவில்லை என  15  வயது சிறுமியின் தாய் புகார் பதிவு செய்திருந்தார். இதுகுறித்து வழக்கு பதிவு செய்த போலீஸார் சிறுமியை தீவிரமாக தேடி வந்தனர்.
 
இந்நிலையில் சிறுமியை ஒரு தனியார் விடுதியில் அடைத்து வைத்திருப்பதாக போலீஸாருக்கு தகவல் வந்தது. அங்கு விரைந்து சென்ற போலீஸார் சிறுமியை  பத்திரமாக மீட்டனர்.
 
அதன் பின்னர் சிறுமி பரிசோதனைக்காக நாகை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். இதனையடுத்து போலீஸார் தீவிர விசாரணை நடத்தி சிறுமியை கடத்திய குற்றவாளிகளை தேடி வந்தனர்.விசாரணையில்  நாகையைச் சேர்ந்த நீலகண்டன், அரவிந்த், குப்புசாமி ஆகியோர் அந்த சிறுமியிடம் ஆசை வார்த்தை கூறி வேளாங்கண்ணிக்கு அழைத்து சென்று அங்குள்ள விடுதியில் வைத்து 4 நாட்களாக பாலியல் பலாத்காரம் செய்தது தெரியவந்தது.
 
இதனைதொடர்ந்து மூன்று பேர் மீதும், போலீஸார் போக்ஸோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து கைது செய்தனர். இந்த சம்பவத்தால் வேளாங்கண்ணி பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.