1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sinoj
Last Modified செவ்வாய், 21 மார்ச் 2023 (23:04 IST)

உணவு பார்சல் கட்ட தாமதமானதால் ஊழியரின் விரலைக் கடித்து துப்பிய நபர்!

ஓட்டலில் உணவு பார்சல் கட்ட தாமதமாகும் என்பதால் ஊழியரின் விரலைக் கடித்துத் துப்பிய நபரை போலீஸார் கைது செய்துள்ளனர்.

இன்றைய காலத்தில் எல்லாம் உடனே, அவசரமாக நடக்க வேண்டும் என்ற நிர்பந்தம் எல்லோரிடமும் உண்டு, பேருந்து, டிராபிக் சிக்னல், வங்கி கியூ, பணிக்குப் போவது, வருவது, விளையாட்டு, தியேட்டரில் டிக்கெட் எடுப்பது, ஓட்டலில் சாப்பிடுவது,  என எல்லாவற்றிலும் யாருக்கும் பொறுமையுடன் காத்திருக்க நேரமில்லை.

அந்தளவுக்கு வேலைப்பளுவும் பொருளாதாரமும்  மக்களை இப்படி வாழ்க்கையை நோக்கி அவசரகதியாகவே நகர்த்துகிறது போலும்.

இந்த நிலையில்,. ராமநாதபுரத்தில் ஒரு ஓட்டலுக்குச் சென்ற நபர், அங்கு பணியில் இருந்த கதிரேசன் என்பவரிடம் தனக்கு  உணவு பார்சல் வேண்டுமென்று கூறியுள்ளார்.

இதில் இருவருக்குமிடையே வாக்குவாதம் எழுந்துள்ளதாகக் கூறப்படுகிறது. இந்த நிலையில், உணவு பார்சல் வாங்க தாமதம்ஆகும் என்பதால், ஆத்திரமடைய  நபர், ஊழியர் கதிரேசனின் ஆட்காட்டி விரலைக் கடித்து துப்பிடிட்டு தப்பியோடிவிட்டார்.

அந்த நபர் விரலை  கழிவு நீர்க்கால்வாயில் போட்டதால் நீண்ட நேரம் தேடியும் விரலைக் கண்டுபிடிக்க முடியவில்லை; எனவே சக ஊழியர்கள் கதிரேசனை மீட்டு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.

விரலைக் கடித்த நபரை போலீஸார் கைது செய்துள்ளனர்.