ஞாயிறு, 22 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Updated : செவ்வாய், 24 நவம்பர் 2020 (10:59 IST)

அண்ணனை வெட்ட அரிவாளுடன் ஆள் சேர்த்து வந்த தம்பி – மதுரையில் பரபரப்பு!

மதுரையில் குடும்ப தகராறு காரணமாக தம்பியே அண்ணனை வெட்ட அரிவாளோடு அவர் வீட்டுக்கு சென்றது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மதுரை குரணி கிராமத்தைச் சேர்ந்த அறிவானந்தம் – வனத்தாய் தம்பதிகளுக்கு அருண் மற்றும் அர்ஜுனன் என்ற இரண்டு மகன்கள் உள்ளனர். இதில் மூத்த மகனான அருண் மீது பல குற்ற வழக்குகள் உள்ளதாக சொல்லப்படுகிறது. இதையடுத்து தனது மனைவியின் ஊரான செல்லூர் பகுதியில் வசித்து வந்துள்ளார். தம்பி அர்ஜுனனும் கட்டத்தேவன்பட்டியில் உள்ள தனது மனைவி வீட்டில் வசித்து வந்தார். 

இந்நிலையில் தனியாக வசித்து பெற்றோரிடம் சென்று அடிக்கடி அருண் தகராறு செய்துள்ள்ளார். இதனால் தாய் வனத்தாய் கோபித்துக்கொண்டு வீட்டை விட்டு வெளியே சென்றுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த அர்ஜுனன் தன் அண்ணனை வெட்டுவதற்காக மனைவியின் உறவினர்களோடு சேர்ந்து அரிவாளோடு அருண் வீட்டுக்கு செல்ல, அப்போது அவர் வீட்டை சாத்திக்கொண்டு உள்ளே சென்று மறைந்துள்ளார். இதன் பின்னரும் அர்ஜுனன் நீண்ட நேரமாக அரிவாளோடு அங்கேயே சுற்றிக்கொண்டு நின்றுள்ளார். இதனால் அந்த பகுதி பரபரப்பாக காணப்பட போலிஸார் தகவல் அறிந்து வந்து அர்ஜுனனை விசாரித்துள்ளனர்.