வியாழன், 9 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Prasanth Karthick
Last Updated : வியாழன், 16 செப்டம்பர் 2021 (11:44 IST)

6 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை செய்து கொலை! – குற்றவாளி ரயிலில் பாய்ந்து தற்கொலை

ஐதராபாத்தில் சிறுமி வன்கொடுமை செய்யப்பட்டு கொல்லப்பட்ட வழக்கில் சம்பந்தப்பட்ட குற்றவாளி ரயிலில் பாய்ந்து தற்கொலை.

ஐதராபாத்தில் சில நாட்கள் முன்னதாக 6 வயது சிறுமியை ராஜூ என்ற நபர் பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்த சம்பவம் தேசிய அளவில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த போலீஸார் ராஜூவை தேடி வந்த நிலையில் ராஜூ பற்றி துப்பு தருபவர்களுக்கு ரூ.10 லட்சம் சன்மானமும் அறிவித்தனர்.

சுமார் 3000 போலீஸார் ராஜூவை தேடிவந்த நிலையில் குற்றவாளி ராஜூ ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டுள்ளது தற்போது தெரிய வந்துள்ளது. இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.