1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
  4. Man arrested for marrying minor girl

மைனர் பெண்ணை திருமணம் செய்த நகைக்கடை ஊழியர்… மூன்று மாதம் கழித்து கைது!

மைனர் பெண்
ஆத்தூரில் நகைக்கடையில் வேலை செய்யும் 30 வயது இளைஞர் 16 வயது பெண்ணை திருமணம் செய்ததால் கைது செய்யப்பட்டுள்ளார்.

சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகே உள்ள சதாசிவ புரத்தை சேர்ந்த நகைக்கடை ஊழியர் அருள்பிரகாஷ். 30 வயதாகும் இவர் அதே பகுதியைச் சேர்ந்த 16 வயது பெண்ணை திருமணம் செய்துகொண்டதாக காவல் நிலையத்துக்கு தகவல் வந்தது.

விசாரணையில் அருளுக்கும் மைனர் பெண்ணுக்கும் 3 மாதங்களுக்கு முன்னர் திருமணம் நடந்தது உறுதியானது. இதையடுத்து அருள்பிரகாஷ் போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டார். அந்த மைனர் பெண்ணை மீட்ட போலிசார் காப்பகத்தில் ஒப்படைத்துள்ளனர்.