வெங்கட்பிரபு இயக்கத்தில் கஜோல்… பிரம்மாண்டமாக உருவாகும் படம்!

Last Modified புதன், 15 செப்டம்பர் 2021 (10:25 IST)

இயக்குனர் வெங்கட்பிரபு இயக்கத்தில் உருவாகும் படத்தில் கஜோல் நடிக்க உள்ளார்.

இயக்குனர் வெங்கட்பிரபு மாநாடு படத்தின் வேலைகளை முடித்துவிட்டு பின் தயாரிப்பு பணிகளை மேற்கொண்டு வருகிறார். அடுத்த படமாக இப்போது கிச்சா சுதீப் நடிப்பில் ஒரு படத்தை இயக்கும் முயற்சியில் ஈடுபட்டு வருகிறார். இந்த படத்தை தென்னிந்திய மொழிகளான தமிழ், தெலுங்கு, கன்னடம் மற்றும் மலையாளம் ஆகிய நான்கு மொழிகளிலும் உருவாக்க உள்ளதாக சொல்லப் படுகிறது.

இந்நிலையில் இந்த படத்தில் மேலும் இரண்டு நடிகர்களாக அரவிந்த் சுவாமி மற்றும் பிரபுதேவா ஆகியோரும் நடிக்க உள்ளார்களாம். இந்த படத்துக்கு யுவன் உள்ளிட்ட சில இசையமைப்பாளர்கள் இசைப் பணியை மேற்கொள்ள உள்ளதாக சொல்லப்படுகிறது. இந்நிலையில் இந்த படத்தில் இப்போது மற்றுமொரு முக்கிய வேடத்தில் பாலிவுட் நடிகை கஜோல் நடிக்க உள்ளதாக சொல்லப்படுகிறது. பிரபுதேவா, அரவிந்த்சுவாமி மற்றும் கஜோல் ஆகியவர்கள் ஏற்கனவே 1997 ஆம் ஆண்டு மின்சாரக் கனவு படத்தில் இணைந்து நடித்துள்ளார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.இதில் மேலும் படிக்கவும் :