1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
  4. No political conversation says mk stalin

அரசியல் பேசவில்லை: மம்தா சந்திப்புக்கு பின் முதல்வர் ஸ்டாலின் பேட்டி!

mamtha stalin
அரசியல் பேசவில்லை: மம்தா சந்திப்புக்கு பின் முதல்வர் ஸ்டாலின் பேட்டி!
மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி தமிழக முதலமைச்சர் முக ஸ்டாலினை இன்று சந்தித்த நிலையில் சந்திப்புக்கு பின்னர் பேட்டியளித்த மு க ஸ்டாலின், மம்தா பானர்ஜி உடனான சந்திப்பு மரியாதை நிமித்தமானது என்றும் இந்த சந்திப்பின்போது அரசியல் பேசவில்லை என்றும் தெரிவித்துள்ளார். 
 
சென்னை வந்த மம்தா பானர்ஜி முதல்வர் முக ஸ்டாலின் வீட்டுக்கு சென்று அவரை சந்தித்த நிலையில் தேசிய அளவில் மாற்றம் கூட்டணி அமைப்பது குறித்து பேச்சுவார்த்தை நடக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது 
 
ஆனால் முதல்வர் ஸ்டாலின் செய்தியாளரிடம் பேசிய போது இது ஒரு மரியாதை நிமித்தம் சந்தித்தார் என்றும் அரசியல் எதுவும் பேசவில்லை என்றும் தெரிவித்து உள்ளார்
 
மம்தா பானர்ஜி செய்தியாளர்களிடம் பேசியபோது முக ஸ்டாலின் எனது அரசியல் நண்பர் என்றும் சென்னை சென்றதால் மரியாதை நிமித்தமாக சந்தித்தேன் என்றும் தெரிவித்துள்ளார் 
 
எனவே இந்த சந்திப்பில் தேசிய அளவிலான கூட்டணி குறித்து எதுவும் பேசப்படவில்லை என்பது தெளிவாகிறது.
 
Edited by Mahendran
About Writer
Mahendran
அடுத்த கட்டுரையில்
தந்தை . கண்முன்னே மாணவி தற்கொலை