வியாழன், 26 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Sinoj
Last Modified: செவ்வாய், 1 நவம்பர் 2022 (15:17 IST)

மறைந்த புனித் ராஜ்குமாருக்கு விருது: பெங்களூர் சென்ற சூப்பர் ஸ்டார்!

rajini
மறைந்த கன்னட சூப்பர் ஸ்டார் புனித் ராஜ்குமாருக்கு கர்நாடக அரசு, கர் நாடக ரத்னா விருது வழங்குகிறது, இந்த விழாவில் கலந்துகொள்ள சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அங்கு சென்றுள்ளார்.

கன்னடத்தில் பவர் ஸ்டார் என்று அழைக்கப்படும்  நடிகர் புனித் ராஜ்குமார். புனித் ராஜ்குமார்(46) கடந்த ஆண்டு அக்டோபர் 29 ஆம் தேதி உடற்பயிற்சி செய்துகொண்டிருந்தபோது, திடீர் மாரடைப்பால் உயிரிழந்தார். இந்த சம்பவம் ஒட்டு மொத்த ரசிகர்களுக்கும் சினிமா துறையினருக்கும் பேரதிர்ச்சியை ஏற்படுத்தியது.

சிறுவயதிலேயே சினிமாவில் நடிக்க வந்த புனித் ராஜ்குமார் சினிமாவில் நடிப்பது மட்டுமின்றி, ஆதரவற்றை குழந்தைகளுக்கு கல்வி என்று பல உதவிகள் செய்து வந்தார். இதனால், கன்னட மக்கள் அவர் மீது பெருமளவு அன்பு வைத்துள்ளனர்.


இந்த நிலையில், அவரது சாதனையை அங்கீகரிக்கும் விதமாக கர்நாடக மா நில அரசு, அவருக்கு அம்மா நிலத்தின் உயரிய விருதான ''கர்நாடக ரத்னா விருதை'' இன்று வழங்குகிறது.

இந்த விழா இன்று பெங்களூரில்  நடக்கிறது, முதல்வர் பசுவராஜ் இந்த விருதை வழங்குகிறார். இந்த விழாவில் கலந்துகொள்வதற்காக  சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தனி விமானம் மூலம் பெங்களூர் சென்றுள்ளார். அவரை அம் மா நில சுகாதாரத்துறை அமைச்சர் சுகாதார் வரவேற்றார். இப்புகைப்படம் வைரலாகிறது.

புனித்ராஜ்குமார் கடைசியாக நடித்த படம் ஜேம்ஸ் சமீபத்தில் வெளியாகி வசூலில் சாதனை படைத்தது குறிப்பிடத்தக்கது.

Edited by Sinoj