1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Senthil Velan
Last Updated : செவ்வாய், 20 ஆகஸ்ட் 2024 (20:52 IST)

பாஜக தலைமையில் மாமன் மச்சான் கூட்டணி..! விஜய்க்கு அழைப்பு விடுத்த அண்ணாமலை..!!

Annamalai
பாஜக தலைமையில் மாமன் மச்சான் கூட்டணி அமைக்கப்படும் என்று தமிழகம் பாஜக தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
 
இது தொடர்பாக செய்தியாளர்களை சந்தித்த அவர், தமிழகத்தில் பாஜக ஆட்சி வரவேண்டும் என மக்கள் எதிர்பார்ப்பதாக கூறினார். தமிழகத்தில் அதிமுக மற்றும் திமுக பங்காளி கட்சிகள் தான்,  ஆனால் அந்த பங்காளிகளுடன் நாங்கள் ஒருபோதும் சேரப் போவது கிடையாது என்று அண்ணாமலை தெரிவித்தார். 

பாஜக தலைமையில் மாமன் மச்சான் கூட்டணி அமைக்கப்படும் என்று அவர் கூறினார். தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் கூட்டணிக்கு அழைத்தால் அவருடன் கூட்டணி வைப்பீர்களா என்ற கேள்விக்கு பதில் அளித்த அண்ணாமலை,  அவரும் மாமன் மச்சான் தான் என்று கூறினார். 


மாமன் - மச்சான் கூட்டணி என்றால் வேற்றுமையில் ஒற்றுமை என்றும் அதில் ஜாதி, மதம், இனம் கிடையாது என்றும் அவர் தெரிவித்தார்.   எங்கள் கூட்டணிக்கு எல்லோரும் வரலாம் என அழைப்பு விடுத்த அண்ணாமலை, 2026 தேர்தலில் அரசியல் களத்தை இந்த மாமன் - மச்சான் என்ற வார்த்தை மாற்றும் என்ற நம்பிக்கை இருக்கிறது என்று குறிப்பிட்டார்.