வியாழன், 23 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Mahendran
Last Modified: வியாழன், 15 ஆகஸ்ட் 2024 (13:19 IST)

ஆகஸ்ட் 28ஆம் தேதி அண்ணாமலை லண்டன் பயணம்.. தலைவர் பதவியில் மாற்றமில்லை..!

Annamalai
ஆகஸ்ட் 28ஆம் தேதி தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை மேற்படிப்பு படிக்க லண்டன் செல்ல இருக்கும் நிலையில் பாஜக தலைவர் பதவியில் எந்த விதமான மாற்றமும் இல்லை என பாஜக டெல்லி தலைமை அறிவித்துள்ளது.

இது குறித்து பாஜக டெல்லி தலைமை கூறிய போது ’தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை ஆகஸ்ட் 28ஆம் தேதி லண்டனுக்கு சர்வதேச அரசியல் தொடர்பான படிப்பை தொடங்க உள்ளார் .

ஆக்ஸ்போர்ட் பல்கலைக்கழகத்தில் அவர் செப்டம்பர் இரண்டாம் தேதி முதல் மூன்று மாத காலம் படிப்பார். அங்கிருந்தபடியே அவர் தமிழக பாஜக பணியையும் கவனிப்பார். 2026 சட்டப்பேரவை தேர்தல் வரை பாஜக தலைவராக அண்ணாமலை நீடிப்பார்.

அதுவரை  கட்சியின் அமைப்பு ரீதியாக மற்ற பணிகளை வழக்கம் போல் கேசவ விநாயகம் கவனித்துக் கொள்வார். அடுத்த மூன்று மாதங்களில் தேவைப்பட்டால் பாஜக மூத்த நிர்வாகிகளுடன் அண்ணாமலை காணொளியில் கலந்து ஆலோசித்து முக்கிய முடிவை எடுப்பார் என்று பாஜக தேசிய தலைமை தெரிவித்துள்ளது.

Edited by Mahendran