வியாழன், 26 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Mahendran
Last Modified: திங்கள், 19 ஆகஸ்ட் 2024 (15:35 IST)

கொடி அறிமுக விழாவுக்கு தயாராகும் தவெக.. நிர்வாகிகளுக்கு அழைப்பு விடுத்த விஜய்..!

ஆகஸ்ட் 22ஆம் தேதி தமிழக வெற்றி கழகத்தின் கொடி அறிமுக விழா நடைபெற இருப்பதை அக்கட்சியின் தலைவர் விஜய் அழைப்பு விடுத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளன. 
 
நடிகர் விஜய் கடந்த சில மாதங்களுக்கு முன்னர் தமிழக வெற்றிக்கழகம் என்ற அரசியல் கட்சி தொடங்கிய நிலையில் கட்சியின் கொடி அறிமுகம் வரும் 22ஆம் தேதி பனையூரில் உள்ள கட்சி தலைமையகத்தில் நடைபெற இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளன. 
 
இந்த விழாவில் கலந்து கொள்ள தமிழக முழுவதும் உள்ள 250 மாவட்ட நிர்வாகிகளுக்கு விஜய்யே அழைப்பு விடுத்துள்ளதாகவும் இந்த விழாவில் சில முக்கிய முடிவுகள் எடுக்கப்பட இருப்பதாக கூறப்படுகிறது. 
 
கொடி அறிமுக விழா முடிந்ததும் கட்சியின் முதல் மாநாடு நடத்துவது குறித்த ஆலோசனை நடைபெற இருப்பதாகவும் அன்றைய தினமே மாநாடு நடக்கும் இடம் மற்றும் தேதி குறித்து அறிவிப்பு வெளியாக வாய்ப்பு இருப்பதாகவும் கூறப்படுகிறது. 
 
2026 ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலில் முழுமையாக களம் இறங்க தமிழக வெற்றி கழகம் தயாராகியுள்ளது என்பது இதிலிருந்து தெரிய வருகிறது. 
 
Edited by Mahendran