1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Modified: திங்கள், 5 மார்ச் 2018 (12:35 IST)

எம்.பி. பதவியை ராஜினாமா செய்ய தயார் - மைத்ரேயன் அதிரடி

காவிரி நீர் விவகாரத்தில் மத்திய அரசுக்கு அழுத்தம் கொடுக்க, அதிமுக தலைமை கூறினால் தான் ராஜினாமா செய்ய தயாராக இருக்கிறேன் என மைத்ரேயன் எம்.பி தெரிவித்துள்ளார்.

 
காவிரி விவகாரம் குறித்து கடந்த 3ம் தேதி தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியிடம் ஆலோசனை செய்த திமுக செயல்தலைவர் மு.க.ஸ்டாலின் பின்னர் செய்தியாளர்களிடம் பேசியபோது, காவிரி விவகாரம் குறித்து மத்திய அரசுக்கு அழுத்தம் கொடுக்க தமிழக எம்பிக்கள் அனைவரும் ஒட்டுமொத்தமாக ராஜினாமா செய்வது குறித்த திட்டம் ஒன்றை கூறினார்.
 
மேலும், தமிழக சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றுவதோடு, அதிமுக மற்றும் திமுக எம்.பி.க்கள் அனைவரும் ராஜினாமா செய்வோம் என முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியிடம் கூறியதாகவும் அவர் கூறினார்.
 
இந்நிலையி, இதுபற்றி செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த மைத்ரேயன் “அதிமுக தலைமை விரும்பினால் நான் எம்.பி. பதவியை ராஜினாமா செய்ய தயாராக இருக்கிறேன்” என அவர் தெரிவித்தார். மேலும்,  ராஜினாமா செய்வதால் காவிரி மேலாண்மை வாரியம் அமையுமா? எனவும் அவர் ஸ்டாலினுக்கு கேள்வி எழுப்பியுள்ளார்.