திங்கள், 23 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Prasanth Karthick
Last Modified: வெள்ளி, 10 பிப்ரவரி 2023 (08:06 IST)

மாசி மகாசிவராத்திரி திருவிழா! ராமேஸ்வரத்தில் நாளை கொடியேற்றம்!

Ramanathaswamy temple
ராமேஸ்வரத்தில் உள்ள புகழ்பெற்ற ராமநாதசுவாமி கோவிலில் மகாசிவராத்திரி திருவிழாவிற்கான கொடியேற்றம் நாளை நடைபெறுகிறது.

ராமேஸ்வரம் ராமநாதசுவாமி திருக்கோவிலில் ஆண்டுதோறும் மகாசிவராத்திரி திருவிழா விமரிசையாக கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த ஆண்டு மகாசிவராத்திரி திருவிழாவிற்கான கொடியேற்றம் நாளை தொடங்குகிறது.

நாளை காலை 10.30 மணியிலிருந்து 12 மணிக்குள் ஸ்வாமி சன்னதி முன்பு உள்ள நந்தி மண்டபத்தின் கொடிமரத்தில் கொடியேற்றம் செய்யப்படுகிறது. அது தொடங்கி தொடர்ந்து இரவு 8 மணிக்கு ஸ்வாமி நந்திகேஸ்வரர் வாகனத்திலும், அம்பாள் வெள்ளி வாகனத்திலும் எளுந்தருளும் நிகழ்ச்சி நடைபெறுகிறது.

தொடர்ந்து 11 நாட்கள் நடைபெறும் இந்த திருவிழாவில் சிகர நிகழ்ச்சியாக மகாசிவராத்திரி பிப்ரவரி 18ம் தேதி நடைபெறுகிறது. மகாசிவராத்திரியை முன்னிட்டு நாளை முதல் தினம்தோறும் இரவு ஸ்வாமி, அம்பாள் பல்வேறு வாகனங்களில் பக்தர்களுக்கு எழுந்தருள்வதுடன், வீதி உலா நிகழ்ச்சியும் நடைபெற உள்ளது.

Edit by Prasanth.K