துருக்கி ஓட்டலில் பயங்கர தீ விபத்து.. 10 பேர் பரிதாப பலி..!
துருக்கி பகுதியில் உள்ள நட்சத்திர ஓட்டலில் இன்று அதிகாலை 3:30 திடீரென தீ விபத்து நடந்த நிலையில் இந்த தீ விபத்து காரணமாக ஹோட்டலில் இருந்த 10 பேர் பரிதாபமாக பலியான சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
தீ விபத்து குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு தீயணைப்பு துறையினர் வந்து கடுமையான போராட்டத்திற்கு பின் தீயை அணைத்ததாகவும் தீயை அணைத்த பின்னர் தான் தீ விபத்தில் சிக்கி 10 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர் என்பது தெரியவந்துள்ளதாகவும் செய்திகள் வெளியாகி உள்ளன.
மேலும் 32 பேர் காயங்களுடன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாக கூறப்படுகிறது. தீ விபத்துக்குள்ளான ஓட்டலில் 234 பேர் தங்கி இருந்தனர் என்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையால் அந்த ஓட்டலில் உள்ள தங்கி இருந்தவர்கள் உடனடியாக மாற்றுப் பாதையில் வெளியேற்றப்பட்டதால் உயிர் பலி குறைந்துள்ளதாகவும் கூறப்படுகிறது.
இந்நிலையில் தீ விபத்துக்கான காரணம் குறித்து துருக்கி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்
Edited by Siva